‘ஸ்டார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் ‘காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்’ பாடல் வெளியானது. சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த நடிகர் கவின்,  ‘லிஃப்ட்’, ‘டாடா’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றியின் மூலம் வெள்ளித்திரையிலும் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தொடர்ந்து…

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தின் ‘காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்’ பாடல் வெளியானது.

சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த நடிகர் கவின்,  ‘லிஃப்ட்’, ‘டாடா’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றியின் மூலம் வெள்ளித்திரையிலும் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில், ‘பியார் பிரேமா காதல்’ பட இயக்குநர் இளன் இயக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். லால், அதிதி போகங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : நாடாளுமன்றத்தை பரபரப்பாக்கிய மேற்கோள் – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன?

முன்னதாக யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஸ்டார்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஸ்டார்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்’ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.