தமிழ் திரையுலகின் முதல் அடையாளம் – மார்டன் தியேட்டர்ஸ்

தமிழ் சினிமாவின் முக்கியமான  அடையாளமான திகழ்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் தமிழகத்தில் சினிமாவுக்கு அடையாளமாக கருதப்படுவது சேலம் மாவட்டம் தான். ஏனெனில் அதிக அளவிலான எண்ணிக்கையில் சேலத்திலிருந்தது போன்ற திரையரங்குகள்,…

தமிழ் சினிமாவின் முக்கியமான  அடையாளமான திகழ்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

தமிழகத்தில் சினிமாவுக்கு அடையாளமாக கருதப்படுவது சேலம் மாவட்டம் தான். ஏனெனில் அதிக அளவிலான எண்ணிக்கையில் சேலத்திலிருந்தது போன்ற திரையரங்குகள், தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது.  அந்த காலத்திலேயே 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்திருக்கின்றன. அதற்கான ஓர் ஆதாரமாக இன்றும் இருந்துவருவதுதான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் எனும் திரையரங்கம்.

இந்த திரையரங்கம் தான் தமிழக அரசியலில் பல நடிகர்களையும், கதாசிரியர்களையும் திரையுலகின் மூலம் அரசியல் வாழ்க்கைக்குக் கொண்டுவந்து முதல்வராக்கியுள்ளது.  இங்கு முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஜானகி உள்ளிட்டவர்களும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மாடர்ன் தியேட்டர்ஸின் வரலாறு :

  • 1935- சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் “மாடர்ன் தியேட்டர்ஸ்”-ஐ உருவாக்கினார் டி.ஆர்.சுந்தரம்
  • 1937 – முதல் தயாரிப்பான “சதி அகல்யா” என்ற திரைப்படம் வெளியானது
  • 1938 – மலையாள மொழியின் முதல் பேசும் படமான “பாலன்” திரைப்படத்தை வெளியீடு
  • 1938 – சண்டைக்காட்சி இடம் பெற்ற முதல் தமிழ் படமான “மாயா மாயவன்” வெளியானது
  • 1940 – பி.யூ.சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது
  • 1952 – இந்தியாவின் முதல் ஆங்கிலப் படமான ‘தி ஜங்கிள்’ -ஐ எடுத்து மாபெரும் வெற்றி கண்டது
  • 1956 – தென்னிந்தியாவின் முதல் வண்ணப்படமான எம்.ஜி.ஆர், பானுமதி நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ வெளியானது
  • 1963 ஆகஸ்ட் 29: டி.ஆர்.சுந்தரம் மறைவு – பின் சறுக்கல்களை சந்திக்க ஆரம்பித்து மார்டன் தியேட்டர்ஸ்
  • 1993 – டி.ஆர்.சுந்தரத்தின் மகன் ராமசுந்தரமும் உயிழந்தார். அதன் பின் திரைப்பட தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தம்.
  • மார்டன் தியேட்டர்ஸின் அடையாளமாக எஞ்சியிருப்பது கம்பீரமாக காட்சியளிக்கும் முகப்புப் பகுதி மட்டுமே
  • மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜானகி ராமச்சந்திரன் மற்றும் என்.டி. ராமாராவ் ஆகிய 4 முதல்வரின் முதல் திரைப்படங்களை தயாரித்த பெருமை மார்டன் தியேட்டர்ஸுக்கு மட்டுமே உண்டு
  • 1937-ல் சதி அகல்யா முதல் 1982-ல் வெற்றி நமதே வரை 45 ஆண்டுகள் தயாரித்த படங்கள் 136. இதில் 102 தமிழ் படங்கள், 1 ஹிந்தி, 1 ஆங்கிலம், பல கன்னட, மலையாள படங்கள் அடங்கும்
  • தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்த முதல் நிறுவனம் மார்டன் தியேட்டர்ஸ்.
  • முதல் பேசும் படம், முதல் திகில் படம், முதல் சமூகப் படம், முதல் இரட்டை வேடப்படம், முதல் விளம்பரப் படம், முதல் மலையாளப் படம், முதல் சிங்களப் படம், தமிழகத்தின் முதல் ஆங்கிலப் படம் என சாதனைகளை படைத்தது மார்டன் தியேட்டர்ஸ்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.