லியோ டிரெய்லரில் இருந்த கெட்டவார்த்தையை மியூட் செய்த படக்குழு!…

 யூடியூபில் வெளியான விஜய் பேசிய டிரெய்லரில் விஜய் பேசிய குறிப்பிட்ட அந்த வார்த்தையை ஓசையில்லாமல் (மியூட்) செய்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதியன்று வெளியாக உள்ளது.…

 யூடியூபில் வெளியான விஜய் பேசிய டிரெய்லரில் விஜய் பேசிய குறிப்பிட்ட அந்த வார்த்தையை ஓசையில்லாமல் (மியூட்) செய்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதியன்று வெளியாக உள்ளது. ஷூட்டிங் தொடங்கியது முதலே இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான பட ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஆனால் இவ்வளவு எதிர்பார்ப்பு நிறைந்த ஒரு படத்திற்கு ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி கூட நடத்தப்படவில்லை. மேலும் படத்தின் முதல் காட்சியை அதிகாலையில் வெளியிடுவதில் சிக்கல், ப்ரீ ரிலீஸ் ஈவண்டிற்கு அனுமதி மறுப்பு என படம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

அதேநேரம், டிரெய்லரில் விஜய் பேசிய ஆபாச வார்த்தையும் சர்ச்சையானது. இந்நிலையில், யூடியூபில் வெளியான டிரெய்லரில் குறிப்பிட்ட அந்த வார்த்தையை ஓசையில்லாமல் (மியூட்) செய்துள்ளனர்.

முன்னதாக, நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ, “பார்த்திபன் கதாபாத்திரத்திற்குத் தேவைப்பட்டதால்தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். இதற்கும் விஜய் அண்ணாவுக்கும் தொடர்பு இல்லை.  இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.  லியோ அக்.19 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.