இளைஞர் உயிரிழக்க காரணமாக இருந்த நாய் | அவரது வீட்டிற்குச் சென்று கண்கலங்கி நின்ற நெகிழ்ச்சி சம்பவம்!

கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழக்க காரணமாக இருந்த நாய், அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தார் முன்னிலையில் கண்கலங்கி நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணிக்கரை மாவட்டத்தில் உள்ள காசினகெரே கிராமத்தைச்…

கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழக்க காரணமாக இருந்த நாய், அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தார் முன்னிலையில் கண்கலங்கி நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணிக்கரை மாவட்டத்தில் உள்ள காசினகெரே கிராமத்தைச் சேர்ந்த திப்பேஷ், கடந்த 16 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சாலை விபத்து ஏற்பட தெரு நாயொன்று காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி திப்பேஷின் வீட்டிற்குச் சென்ற அதே நாய், அவரது தாய் உள்ளிட்ட குடும்பத்தார் முன்னிலையில் கண் கலங்கியபடி நின்றது. அதை விரட்ட அவர்கள் முற்பட்டபோதும், அந்த நாய் அங்கிருந்து செல்ல மறுத்து வீட்டிலேயே படுத்துக் கிடந்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், செய்த தவறை உணர்ந்த நாய் பாதிக்கப்பட்டோர் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளதாகக் கூறி நெகிழ்ச்சியடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.