திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அனைவரின் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரிய ஆட்சியாக உள்ளதால் வேட்பாளர்கள் தலைநிமிர்ந்து வாக்கு சேகரிக்க வேண்டும் எனக்கூறினார். மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
விரைவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழில் முதலீடுகள் கொண்டுவரப்படும் என எம்பி கனிமொழி குறிப்பிட்டார்.







