திமுக முழுமையான வெற்றியை பெற்றிட களப்பணியாற்றிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக முழுமையான வெற்றியை பெற்றிட தொண்டர்கள் ஒவ்வொருவரும் களப்பணியாற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி – அதிகாரம் – பதவி அனைத்தையுமே,…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக முழுமையான வெற்றியை பெற்றிட தொண்டர்கள் ஒவ்வொருவரும் களப்பணியாற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி – அதிகாரம் – பதவி அனைத்தையுமே, சமூகநீதி எனும் லட்சியத்தை நிறைவேற்றுவதற்குத் தக்க கருவியாகக் கருதுகிற இயக்கம்தான் திமுக என குறிப்பிட்டுள்ளார். சமூகநீதியை வெட்டி சாய்க்க வெறிக்கொண்டு துடிக்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் ஏதேச்சதிக்காரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்க அகிம்சை போரை தொடங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாளை கூட்டப்படும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற்றவுள்ள தீர்மானமும் கடைக்கோடி தமிழ் மாணவருக்கு மருத்துவ கல்வி வாய்ப்பு கிட்டவேண்டும் எனக்கூறியுள்ள அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காணொலியில் பரப்புரை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டிஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக முழுமையான வெற்றி பெற்றிட தொண்டர்கள் ஒவ்வொருவரும் களப்பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கூட்டணி கட்சியினருடனும் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.