ராமநாதபுரம் மாவட்டம், சித்தம்பூரணி கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேனவயல் அடுத்த சித்தம்பூரணி
கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த். இவரது மனைவி ஜெயசீலியுடன் டிராக்டர்
மூலம் வயலை உழுது விதைத்துவிட்டு, வயலில் இருந்த பூண்டு செடிகளை
அகற்றியுள்ளார். அப்போது வயலில் நடுவில் இருந்த பூண்டை அகற்றும் போது,
மண்ணுடன் கலந்து சிலை ஒன்று இருப்பதைக் கண்டு அதனை எடுத்து பார்த்த போது
அது சுவாமி சிலை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது பற்றி
தொல்லியல் துறையினரிடம் கேட்ட போது, இந்த சிலை பாண்டியர் கால12-13 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த சக்தி சிற்பம் என தெரிவித்தனர். வயலில் சுவாமி சிலை
தோன்றியதாக பரவிய தகவல்களால், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து
ஏராளமான மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து மக்கள் பரவசமடைந்து குழவையிட்டு
வழிபட்டுச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டி போலீஸார், கிராம மக்களிடம்
விசாரணை செய்து வருகின்றனர். ஐம்பொன்னால் ஆன இந்த சிலையின் மதிப்பு
ஒரு கோடி ரூபாய் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர். வருவாய்த்துறை
அதிகாரிகள் சிலையை கைப்பற்றி திருவாடானை தாலுகா அலுவலகத்தில்
பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.
கு. பாலமுருகன்







