தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, நேற்று இரவு சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட வடபழனி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களைய காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குற்ற நிகழ்வுகளை ஆய்வு செய்து வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றி கேட்டறிந்தார்.
குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார். ரோந்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து பின்பு அங்கிருந்த ஒரு ரோந்து வாகனத்தை ஓட்டிப் பார்த்தார்.
காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு முறையாக வழங்க நிலைய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.









