அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் மூலம் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று ஒரு மணி நேரம் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தொழிற்சங்க தலைவர்களிடம் தாம் தெரிவித்தாக கூறினார். அதன் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதுடன் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள் : ஜூன் 1 ஆம் தேதி ’மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா – சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு!!
இந்நிலையில் சென்னையில் நாளை தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.







