டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.…

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக ஆடி, ரன்களை குவித்தனர்.

அண்மைச் செய்தி: ‘90 கோடி ரூபாய் செலவில் தஞ்சாவூர் – சாயல்குடி இருவழிச்சாலை பணி’

தொடர்ந்து, இந்த ஜோடி 83 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து பிருத்வி ஷா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னருடன் சர்பராஸ் கான் இணைய, ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்து, இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 60 ரன்களுடனும், சர்பராஸ் கான் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.