ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால்தான் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடிந்தது! -ஜெய்சங்கர்

ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதே, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருக்க காரணம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா…

ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதே, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருக்க காரணம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, வேறு சில நாடுகளை போன்று, இந்தியாவும் அதனை எதிர்கொள்ள முழு அளவில் தயாராகவில்லை என தெரிவித்தார். ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால், சுகாதார பணிகளை மேற்கொள்ள தயாராவதற்கான அவகாசம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாகவே, உலக நாடுகளுடனான ஒப்பீட்டளவில் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், உலகில் அதிக கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதமும் அதிகரித்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply