முக்கியச் செய்திகள் தமிழகம்

விபத்தில் உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்ணீர் மல்க அஞ்சலி

சாலை விபத்தில் உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் உடலுக்கு தென்சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

கோயம்புத்தூர் தெற்கு தியாகி குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் (31).
இவர் திமுகவின் ஊடக செயற்பாட்டாளராகவும், புகைப்பட கலைஞராகவும், What A
Karavad என்னும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர்
நேற்று மாலை மறைமலைநகர் பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு
ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காகச் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவரது
நண்பரான ஜீவா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அதிவேகமாக வந்த கனரக லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்களை மீட்ட சக பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழந்த சம்பவம் சமூல வலைதளங்களில் வைரலானது. அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்
ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில் இவர்களது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதில் ஸ்டாலின் ஜேக்கப்பின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர்  மல்க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விக்ரம் படத்துக்கு பிரபல இயக்குநர் பாராட்டு!

Web Editor

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு தடை நீட்டிப்பு -உயர் நீதிமன்றம்

EZHILARASAN D

”வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கினேன்”- நடராஜன்!

Jayapriya