முக்கியச் செய்திகள் உலகம்

பிறந்த குழந்தையின் தலையை வெட்டி தாயின் வயிற்றுக்குள் வைத்த கொடூரம்

பாகிஸ்தானில் பிறந்த குழந்தையின் தலையை துண்டித்து மீண்டும் தாயின் வயிற்றுக்குள் வைத்த சுகாதார துறை ஊழியர்களின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாகிஸ்தானில் தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தை சேர்ந்த இந்து பெண் ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு, அருகில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால், அனுபவமற்ற ஊழியர்களே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அப்போது, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. உடனே குழந்தையின் தலையை வெட்டி அந்த பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே சுகாதார ஊழியர்கள் வைத்துள்ளனர். இதனால்  குழந்தையின் தலை கருச்சிதைவுக்குள் மாட்டி கொண்டதால், அந்த பெண் உயிருக்க ஆபத்தான நிலைக்கு சென்று விட்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தாயின் வயிற்றை அறுத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் எஞ்சிய உறுப்புகளையும், தலையையும் வெளியே அகற்றி பெண்ணின் உயிரை காப்பாற்றினர்.

இந்த கொடூரமான செயல் வெளியே தெரியவந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுகாதாரத்துறையின் ஊழியர்கள் செய்த இந்த செயல் குறித்து விசாரணை நடத்த, பாகிஸ்தான் சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். சாக்ரோவில் பெண் மருத்துவர்கள் இல்லாமல் போனது எப்படி என்றும், ஊழியர்கள் எதற்காக இந்த செயலை செய்தார்கள் என்றும் விசாரிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, அந்த பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது, சில ஊழியர்கள் அந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததாகவும், சிலர் குழந்தை பிறந்ததையும் செல்போன் மூலம் படம் பிடித்து, பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் அனுப்பி வைத்ததாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். அது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டென்மார்க்கில் ஏன் இந்த தடுப்பூசியை தடை செய்தார்கள்?

Gayathri Venkatesan

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் தகவல்.

Ezhilarasan

சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

Saravana Kumar