‘அக்னிபாத்’: முப்படைகளின் தளபதிகளையும் சந்திக்கிறார் பிரதமர்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முப்படைகளின் தளபதிகளையும் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடுகிறார். 17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில்…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முப்படைகளின் தளபதிகளையும் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடுகிறார்.

17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.

ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டின் பல பகுதிகளில் அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த சூழலில் முப்படைகளின் தளபதிகளையும் பிரதமர் மோடி இன்று சந்தித்து கலந்துரையாடுகிறார். நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஏறத்தாழ 600 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.