ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஃபாக்ஸ்கான் குழும தலைவர் யங் லீயூ முன்னிலையில், ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஒப்பந்தம் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஃபாக்ஸ்கான் குழும தலைவருடன் மின்சார வாகனம் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களில் மேலும் முதலீடு செய்வது குறித்தும் விவாதித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றும் லட்சியத்தில், இது மற்றொரு மைல்கல் என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.