சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீழடியில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து மத்திய தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை தொடங்கியது. இதுவரை நடந்த 6 கட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், பாசிகள், பவளம், அரசு முத்திரை, வரிவடிவ பானை ஓடுகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் 11 கோடியே 3 இலட்சம் மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. 6 கட்டட தொகுப்பு மற்றும் 1 கல் மண்டபம் என கீழடி அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது.
கல் தொல் பொருட்கள் காட்சிக் கூடம், உலோக பொருட்கள் காட்சிச் கூடம், மணிகள் மற்றும் தந்த தொல் பொருட்கள் காட்சிக் கூடம் அமைக்கப்படுகிறது.விலங்குகள் குறித்த தொல் பொருட்கள் காட்சிக் கூடம், சுடுமண் பானைகள் தொல் பொருட்கள் காட்சிக் கூடம் அமைக்கப்படுகிறது.
கட்டடப் பணிகள் முடிந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார். கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை உலக மக்கள் பார்க்க அருங்காட்சியகம் கட்டப்பட்டது.
ஒரு ஆண்டில் பாரம்பரிய முறையில் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.தமிழர்களின் வாழ்க்கை வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்தது கீழடி அகழாய்வு.