திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதி எது? இன்று வெளியாகிறது அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் தொகுதி பற்றிய விவரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி…

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் தொகுதி பற்றிய விவரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில்,  காங்கிரஸ் மற்றும் மதிமுக தவிர,  மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதும் இறுதி செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்நிலையில்,  மதிமுக போட்டியிடும் தொகுதி அடையாளம் காணாமல் உள்ள நிலையில், இன்று தொகுதி அடையாளம் காணப்பட்டு,  ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 11:00 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் மதிமுக தேர்தல் குழுவினர்,  திமுக தேர்தல் குழுவினரை சந்திக்க உள்ளனர்.

அப்போது,  மதிமுக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.