முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் நாளை டெல்லி பயணம்

ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான தயார் நிலை பற்றி ஆலோசனை செய்வதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி நாளை டெல்லியில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி முதன் முதலாக அறிவிப்பை வெளியிட்டார். எனவே தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது, அவர் டெல்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடுக்கு முன்பாக 32 துறைகள் தொடர்பாக 200 கூட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டங்கள் அடுத்த ஆண்டில் தொடங்க உள்ளன. கூட்டம் நடத்தப்படும் இடங்களில் ஒன்றாக சென்னையும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே பூமி-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம் என்ற குறிக்கோளுடன் நடத்தப்பட உள்ள ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்களை தமிழகத்தில் நடத்தும் இடங்களில் தஞ்சை, கோவை ஆகியவையும் பரிசீலனையில் உள்ளன. இதற்கான ஆலோசனைகளை தமிழக அரசிடம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

நாளை டெல்லியில் நடக்கும் கூட்டத்தில், ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்கள் நடக்கும் இடங்கள் பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களான மாமல்லபுரம் 5 ரதம், வெண்ணை உருண்டை பாறை, வேலூர் கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஜி20 என்ற எழுத்து வண்ண விளக்குகளால் ஒளிர செய்யப்பட்டுள்ளன. இதுபோல் இந்தியாவின் 100 தொல்லியல் சின்னங்கள் 7-ந்தேதி வரை வண்ண விளக்குகளால் ஒளிர செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2 பாஜக எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்; திமுக எம்.பி

EZHILARASAN D

திமுகவில் 12% மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்?

G SaravanaKumar

ஈவ் டீசிங் வழக்கில் நடவடிக்கை- எஸ்பி உறுதி

G SaravanaKumar