முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு இருக்கக்கூடாது – கே.எஸ்.அழகிரி

சென்னையில் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இருக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் சென்னையில் சில திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆனால் அவை ஏற்கனவே தொடங்கி வைத்த திட்டங்களை மீண்டும் தொடங்கி வைத்த ஒரே பிரதமர் மோடிதான் என்றார். சென்னை துறைமுகம்- மதுரவாயல் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மீண்டும் தொடக்க விழா என்பது ஏற்புடையது அல்ல. எண்ணூரில் எரிவாயு முனையம் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டது என சாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

விழாவில் முதலமைச்சர் பெருத்தன்மையுடன் சென்று உள்ளார். ஆனால் பிரதமர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இருக்க கூடாது. பிரதமரின் சுற்றுப்பயணத்தை தெலுங்கானா முதலமைச்சர் புறக்கணித்தார். பிரதமர் வந்தால் வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாமல் அரசு மேடைகளில் அரசியல் செய்கிறார் என்பதால் தெலுங்கானாவில் புறக்கணிக்கின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் விழாவில் கலந்து கொண்டது துர்திஷ்டவசமானது என்றார்.

 

பெட்ரோல், டீசல் விலையை மோடி குறைக்காமல் நீண்ட காலமாக இருந்தார். ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் உடனடியாக பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்தார். பா.ஜ.க. செய்யும் அரசியல் பொதுமக்களிடம் எடுபடாது. ஒரு மாநிலத்திற்கு என்ன வேண்டும் என முதலமைச்சர் சொல்வது எப்படி நாடகம் ஆகும். மாநிலத்தின் தேவையை கேட்ட முதலமைச்சருக்கு அருகதை, உரிமை இல்லையா. தேவைகளை கேட்டதை தவறு என்று சொல்வது அவர்களின் அடிமை உணர்வு தெரிகிறது. எங்களை போலவே அடிமை உணர்வுடன் இருங்கள் என்று கூறுகின்றனர். பா.ஜ.க. தலைவரின் கருத்து தவறானது. முதலமைச்சர் தவறாகவோ ஒழுக்க குறைவாகவோ பேசவில்லை என கூறினார்.

 

மத்திய அரசுக்கு மாநில அரசு பாக்கி வைத்திருந்தால் தவறில்லை. ஆனால் தர வேண்டியதை தராமல் இருப்பது தான் தவறு. சேர வேண்டிய திட்டங்கள் சேரவில்லை என்பது தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு. அண்ணாமலை முழங்காலுக்கும் உச்சதலைக்கும் முடிச்சு போடுவது தவறு. தமிழ்நாடு கல்வி கொள்கை மிகசிறந்தது. மத்திய கல்வி கொள்கை முலம் மீண்டும் குருகுல வாழ்க்கைக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். இது உயர்ந்தவர் தாழ்ந்தவரை உருவாக்கும். மாநில கல்வி தான் சிறந்தது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.

கச்சத்தீவு நீண்ட பிரச்சனை. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவிற்கும் இடையே பிரச்சனை வந்த போது சிறிய அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பர்மா, இலங்கை, நேபாளம், வங்காள தேசம் போன்ற நாடுகளுடன் இந்திரா காந்தி நெருக்கமாக உறவை வைத்து இருந்தார். அப்போது இலங்கையிடம் கச்சத்தீவு தந்த போது தமிழக மீனவர்கள் வலையை காய வைத்து கொள்ளலாம். மீன்பிடி செல்லும் போது தங்கி கொள்ளலாம் என்ற உடன்பாட்டுடன் செய்யப்பட்டது. ஆனால் இலங்கை நம்முடன் இல்லை. இலங்கை சீனாவுடன் உள்ளது. இலங்கைக்கு உதவி செய்யும் அளவிற்கு தமிழகம் வளர்ந்து இருக்கிறது. இந்த நேரத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் தவறில்லை என்றும்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிருஷ்ணகிரியில் ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு சாதனை!

Jayapriya

திருமூலர் தந்த யோகாவை கடைபிடிக்க வேண்டும் – ஆளுநர் ரவி

Web Editor

அதிமுக ஆட்சியில் “சிஸ்டம்” சரியில்லை; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

EZHILARASAN D