சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த பள்ளி மாணவர்களுக்கு 24 மணிநேரத்திலேயே
சாதி சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த குடும்பத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பயணியர் மாளிகையில் சாதி சான்றிதழ் கேட்டு மனு
அளித்த பள்ளி மாணவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள்ளேயே சாதி சான்றிதழை வழங்கி
நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல் பொது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
செஞ்சி அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்த முருகன்-பாரதி தம்பதிகளின் மகளான
பூஜா(17), என்பவர் பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரி படிப்பு சேர்வதற்காக சாதி
சான்றிதழ் கேட்ட நிலையில், அவர்கள் இந்து-தொம்பர் பிரிவை சேர்ந்தவர்கள்
என்பதால் சாதி சான்றிதழ் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததாக
கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செஞ்சியில் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து பூஜா மனு கொடுத்த நிலையில் அந்த மனுவை முதலமைச்சர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது.
இந்நிலையில் முதல்வரின் கோரிக்கைக்கு ஏற்றபடி உடனடியாக சாதி சான்றிதழ் தயார் செய்யப்பட்டு மனு கொடுத்து 24 மணி நேரத்துக்குள்ளையே இன்று மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் திருவண்ணாமலையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் செஞ்சி அரசு பயணியர் மாளிகையில் முதலமைச்சர் கையால் அந்த பள்ளி மாணவி கல்லூரி படிப்பில் சேர்வதற்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடன் அமைச்சர்கள் க.பொன்முடி செஞ்சி மஸ்தான் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.








