அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த ‘சொர்க்கவாசல்’ – ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். சமீபத்தில் வெளியான படத்தின்…

ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி சொர்க்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களைக் கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது.

ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள் : கனமழை எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு… எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் நிறைந்துள்ளது. திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர் ஜே பாலாஜிக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் அதிக வன்முறைக் காட்சிகள் மற்றும் மிகுந்த ரத்தம் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.