முக்கியச் செய்திகள் தமிழகம்

அன்னையர் தினத்தில் தமிழ்நாட்டு பாட்டிக்கு சப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மகிந்திரா

இந்திய தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா அன்னையர் தினத்தையொட்டி தமிழ்நாட்டிலுள்ள இட்லி அம்மாவிற்கு வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

கொரோனா பரவலின் போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பலரும் வேலைகளை இழந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அப்போது கோவை பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் பாட்டி ஒருவர் இட்லி ஒன்று ரூ.1-க்கு விற்பனை செய்து வந்தார். இது கொரோனா பரவலால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட பலரின் பசியை போக்கியது.

இதுகுறித்து ஆனந்த் மகிந்திரா கடந்த ஏப்ரல் 2021ல் தனது டிவிட்டர் பதிவில், இட்லி அம்மா விரைவில் மக்களுக்கு தனது சொந்த வீட்டில் வைத்து உணவு சமைத்து வழங்குவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் உலக அன்னையர் தினமான இன்று இட்லி அம்மாவிற்கு ஆனந்த் மகிந்திரா வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் இட்லி அம்மாவின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்ததோடு, அன்னையர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

 

Advertisement:
SHARE

Related posts

ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு கமல்ஹாசன் ஆதரவு

Saravana Kumar

பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

Gayathri Venkatesan

ஜீ5 ஒரிஜினலில் வெளியாகிறது சமுத்திரகனியின் ‘விநோதய சித்தம்’

Halley Karthik