திருமணம் முடித்த கையோடு மணமகளை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற மணமகன்

பென்ஸ், ஜாக்குவார் போன்ற உயர்ரக கார்களை வாடகைக்கு எடுத்து ஊர்வலம் சென்று பந்தா காட்டி திருமணம் செய்யும் பலருக்கு மத்தியில் பாரம்பரியம் மறக்காமல் திருமணம் முடிந்தவுடன் மணமகளை, மணமகன் தனது வீட்டிற்கு மாட்டு வண்டியில்…

பென்ஸ், ஜாக்குவார் போன்ற உயர்ரக கார்களை வாடகைக்கு எடுத்து ஊர்வலம் சென்று பந்தா காட்டி திருமணம் செய்யும் பலருக்கு மத்தியில் பாரம்பரியம் மறக்காமல் திருமணம் முடிந்தவுடன் மணமகளை, மணமகன் தனது வீட்டிற்கு மாட்டு வண்டியில் அழைத்து சென்ற நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 வது வார்டு வடபெரும்பாக்கம், செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோபால். இவரது மனைவி கண்ணகி . இந்த தம்பதியரின் மகன்தான் விஜய். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் – மேரி ஆகியோரின் மகள் ரம்யாவை நிச்சயம் செய்தனர்.

இதன் பிறகு இவர்களது திருமணத்தை குலதெய்வ கோயிலில் நடத்த முடிவு செய்து திருமணமும் நடைபெற்றது. பிறகு மணமக்களை வீட்டிற்கு காரில் அனுப்பி வைக்காமல், தங்களது பரம்பரியத்தை மறக்க இருக்கும் வகையில், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தங்களின் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை ஏற்றிக்கொண்டு தனது வீட்டிற்கு புறப்பட்டார். மணமகன் விஜய் மாட்டு வண்டியை ஓட்ட, மணமகள் ரம்யா மணப்பெண் அலங்காரத்தில் ஒய்யாரமாக அமர்ந்து உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ சென்றார். அப்பொழுது உறவினர்களும், அவர்களது நண்பர்களும் ஆனந்தமாக மகிழ்ச்சி அடைந்து மணமக்கள் மீது மலர்களை தூவி வாழ்த்தியவரே சென்றனர்.

இதைப் ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் வாடகைக்கு பென்ஸ் ஜாக்குவார் கார்களை எடுத்து ஊர்வலமாக சென்று பந்தா காட்டி திருமணத்தை நடத்தும் பலர் மத்தியில் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு மாட்டு வண்டியில் சென்ற மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு பழமை மாறாமல் இன்னும் ஒரு சிலர் இதுபோல் உள்ளது கிராமத்தின் உயிர்ப்பு தன்மையை நிலை நிறுத்தி வருவதை காட்டுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.