’ஹலோ பினராயி…’ என அழைத்த சிறுவன்: கை கொடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சிறுவன் ஒருவன் ‘ஹலோ பினராயி ‘ என பெயர் சொல்லி அழைத்து,  கை கொடுத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில்…

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சிறுவன் ஒருவன் ‘ஹலோ பினராயி ‘ என பெயர் சொல்லி அழைத்து,  கை கொடுத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.  நிகழ்ச்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பொழுது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு இடையே புகுந்து சிறுவன் ஒருவன்,  ”பினராயி விஜயா.. பினராயி விஜயா” என  அவருடைய பெயரை சொல்லி அழைத்தான்.

பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து முதலமைச்சரிடம் வந்து பினராயி விஜயா என அழைத்த சிறுவனுக்கு,  முதலமைச்சர் சிரித்த படி கை கொடுத்தார்.  குழந்தையின் பெயரை கேட்டு நலன் விசாரித்த முதலமைச்சர் இனி நான் செல்கிறேன்,  ஓகே பை பை என்று சொல்லி விட்டு  சிரித்து கொண்டே கடந்து சென்றார்.  இந்த வீடியோவை கேரளா கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.