ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பூமியை போன்ற கோளை புதிதாகக் கண்டறியப்பட்ட கருந்துளை விழுங்குகிறது என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒன்பது பில்லியன் ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் கருந்துளையை வானியலாளர்கள் முதன்முறையாக கண்டுபிடித்துள்ளனர். அது ஒவ்வொரு நொடியும் ஒரு பூமிக்கு சமமான அளவு கொண்ட கோளை விழுங்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் கூறியதாவது:
இது விண்மீன் மண்டலத்திலிருந்து வரும் அனைத்து ஒளியையும் விட 7,000 மடங்கு பிரகாசமாக உள்ளது. இந்த கருந்துளை 50 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மங்கலான கருந்துளை இதற்கு முன்பு கண்டறிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வியக்கத்தக்க பிரகாசமான கருந்துளை இதுவரை கண்டறியப்படாமல் போனது ஆச்சரியம் தான். இருண்டு பெரிய விண்மீன் மண்டலங்கள் ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொண்டதால் ஏற்பட்ட பெருவெடிப்பினால் இவ்வளவு பெரியதாக இந்த கருந்துளை உருவாகியிருக்கலாம் என்று கருதுகிறோம்.
கருந்துளை பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் அழிவில் இருந்து உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையைக் காட்டிலும் இது 500 மடங்கு பெரிய கருந்துளையாகும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பால்வெளி மண்டலத்தின் நடுவில் கண்டறியப்பட்டுள்ள இந்த கருந்துளையின் முதல் புகைப்படத்தை வானியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதை கண்டறிய மிகப் பெரிய தொலைநோக்கியை வானியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். இந்தக் கருந்துளையானது பூமியிலிருந்து 27,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்