முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுகவால் சாதிக்கு அப்பாற்பட்டு வேட்பாளர்களை நிறுத்த முடியுமா ? – குஷ்பூ கேள்வி

காங்கிரஸ் மற்றும் திமுகவால், சாதிக்கு அப்பாற்பட்டு, ஒரு தொகுதியிலாவது வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், பாஜக சார்பில் ‘வெற்றி கொடி ஏந்தி தமிழகம்’ என்ற பரப்புரை பயணத்தை தமிழக பாஜக நிர்வாகியும் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான குஷ்பு மற்றும் தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாதவரம் தொகுதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆயிரம் பேர் பாஜகவில் இணைந்தனர். பின்னர், பாஜக நிர்வாகிகளுடன் பேரணியாக சென்ற நடிகை குஷ்பூ, அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சி, ஆறு ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்களையாவது சொல்ல முடியுமா எனத் தெரிவித்த அவர், காங்கிரஸ் மற்றும் திமுகவால், சாதிக்கு அப்பாற்பட்டு, ஒரு தொகுதியிலாவது வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பினார்.

Advertisement:

Related posts

குடிசை பகுதிகளை அகற்றம்: பா.ரஞ்சித் கண்டனம்

Niruban Chakkaaravarthi

“கருணாநிதிக்கு 6 அடி கொடுக்க மறுத்தவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது” -ஸ்டாலின்

Karthick

“விவசாயிகள் பழைய விலைக்கே உரங்களை வாங்கிக் கொள்ளலாம்” – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா

Gayathri Venkatesan