முக்கியச் செய்திகள் தமிழகம்

1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்: செந்தில் பாலாஜி புது தகவல்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, மின் நுகர்வோர் சேவை மையத்தில் பெறப்பட்ட புகார்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் புகார் மீது தீர்வு காணப்பட்டதாக தெரிவித் தார். நான்கு மாதத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவு பெறும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், இதன் மூலம் கட்டணம் தொடர்பான விவரங்கள் கைபேசிக்கு தானாக வந்து விடும் என்றும் தெரிவித்தார்.

மழை மற்றும் புயல் காலத்தில் தடையில்லா மின்சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசின் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி தொகை வழங்கப்படும் – அமைச்சர் கயல்விழி

Gayathri Venkatesan

கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Ezhilarasan

வெள்ளத்திற்கு காரணம் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள்தான்: சசிகலா

Ezhilarasan