நடிகர் சிவக்கார்த்திகேயேன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட இலவச ஆம்புலன்சின் சேவையை சிவகங்கை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்தியேன். இவர் மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டடை உள்ளிட்ட வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார். தற்போது அவரது நடிப்பில் டான் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவக்கார்த்திக்கேயன் அவரது தந்தை தாஸ் பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கி பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவரது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.21 லட்சம் மதிப்பில் அவசர தேவைகளுக்கு பயன்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அதனை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
அதன் சேவையை இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி , பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதாரத்துறை இனை இயக்குநர், மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Advertisement: