அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மேடையில் பேசியதாவது.. “எல்லாருமே சொன்னாங்க உதயநிதிய முதல்ல பாக்கும்போது ரொம்ப பயமாருந்ததுன்னு சொல்றாங்க. உதயநிதிய 12 வருஷம் முன்னாடி இருந்தே எனக்கு பழக்கம். அப்போ அவர் நடிக்க வரல, ப்ரொடியூஸரா மட்டும் தான் இருந்தாரு. ஒருநாள் சினிமாவ பத்தி ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம் அந்த உரையாடல் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. அப்போ நான் கேட்டேன், ‘என்ன உதய் இவ்ளோ சொல்றீங்களே எப்படி நீங்க அந்த படத்த தயாரிச்சீங்கன்னு’ ஒரு படத்தை பத்தி கேட்டேன். அவரு என் தோள்ல கைய போட்டுட்டு சொன்னாரு, ‘எனக்கும் அந்த டவுட்டு இருந்தது..நான் போய் இயக்குநர்கிட்ட என்ன சார் படம் இப்படி இருக்கேன்னு கேட்டேன். அதுக்கு அவரு இன்னொரு வாட்டி வேணும்னா எடுக்கலாமான்னு கேட்டாரு.அய்யோ சார் ஆள விடுங்கன்னு வந்துட்டேன்னு’ உதய் சொன்னாரு” என்று சொல்லி முடித்தார் ஆர்.ஜே.பாலாஜி.
இதைக்கேட்டு அந்த அரங்கமே சிரிப்பால் நிறைய உதயநிதியும் குலுங்கு குலுங்கி சிரித்தார். உடனே அருகில் இருந்த சிவகார்த்திகேயனை சீண்டிய உதயநிதி அவர் காதில் ஏதோ கிசு கிசுக்க சிவகார்த்திகேயனும் சேர்ந்து சிரிக்க தொடங்கினார். சிவா மேலே பார்த்து எதையோ நினைத்தவர் போலவே சிரிப்பை முழுங்கினார். இதை வைத்து பார்க்கும் போது அந்த மொக்க படம் எதுவென உதயநிதி சிவாவிடம் சொல்லியிருக்க கூடும் என்றே கணிக்கப்படுகிறது. உதயநிதி நடிப்பதற்கு முன்பு அவரின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் சார்பாக தயாரித்து வெளியான படங்கள் மொத்தம் ஐந்து. குருவி, ஆதவன், மன்மதன் அம்பு, வின்னைதாண்டி வருவாயா, ஏழாம் அறிவு ஆகியவையே அந்த படங்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏழாம் அறிவு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு நன்றாகவே ஓடியிருந்தது. விண்ணைத்தாண்டி வருவாய சூப்பர் ஹிட் படமென்பதை அனைவரும் அறிவோம். ஆதவன் படம் கூட பாடலுக்காகவும் வடிவேல் காமெடிக்காகவும் ஓரளவுக்கு ஓடியது என்பதே நம் கணிப்பு. ஆக குருவி அல்லது மன்மதன் அம்பு, இவை இரண்டில் ஏதோ ஒரு படத்தை தான் உதயநிதி சிவகார்த்திகேயனின் காதில் சொல்லியிருக்க வேண்டும் என்றே இணையத்தில் கணிக்கிறார்கள்.
அசுரன் பட வெற்றி விழாவின் போது பேசிய நடிகர் பவன் , “நூறாவது நாள் function ரொம்ப rare ஆன விஷயம். இதுக்கு முன்னாடி குருவியின் 150வது நாள் வெற்றி விழாக்குதான் போயிருக்கேன். அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல.” என்று கூட்டத்தில் குஸ்காவை அவுத்தார். இன்று சிவகார்த்திகேயன் போலவே சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உதட்டை உருட்டினார் தனுஷ். அதன்பிறகு வெற்றிமாறன் அருகில் இருந்த தனுஷிடம் ஏதோ சொல்ல இருவருமே ஜென் நிலைக்கு மாறி சிரிப்பை அடக்கிக் கொண்டனர். அதற்கு பின் தன்னுடைய கருத்துக்கு பவன் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆ.ஜே. பாலாஜியும் குருவி படத்தை தான் அப்படி சொல்லியிருக்கிறார் என்று ஒரு சாராரும், கமலின் மன்மதன் அம்பு படத்தை தான் சொல்லியிருக்க வேண்டும் என்று இன்னொரு சாராரும் கணித்து வருகின்றனர். என்னதான் சிவகார்த்திகேயனின் படத்தை கமல் ப்ரொடியூஸ் செய்தாலும் கமலின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை மதுரை ஏர்போர்டில் தாக்கிய சம்பவத்தில் இருந்து இருதரப்பினரிடமும் அந்த புகைச்சல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்ற வாதத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
ஆனால் மன்மதன் அம்பு படமோ கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் உருவானது. பொதுவாகவே சொன்ன தேதிக்குள் தெளிவாக திட்டமிட்டு படத்தை முடித்து கொடுப்பதது தான் கே.எஸ்.ரவிகுமார் ஸ்டைல் என்பது சினிமா வட்டாரத்தில் அனைவரும் அறிவர். எனவே படத்தை மீண்டும் எடுக்கலாம் என்று அவர் சொல்ல வாய்பே இல்லை எனவும் நிச்சயம் குருவி படத்தை தான் ஆர்.ஜே.பாலாஜி குறிப்பிட்டிருக்க வேண்டும் எனவும் இன்னொரு சாரார் அடித்து சொல்கின்றனர். இந்நிலையில் ஆ.ஜே. பாலாஜியை வண்டியில் ஏற்றத் தொடங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.