சுந்தர் சி – விஷால் கூட்டணில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ’ஆம்பள’. இப்படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், சந்தானம், சதீஷ், வைபவ் உள்பட பலர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராகவும் அறிமுகமானர்.
இதனை தொடர்ந்து விஷால் – சுந்தர்.சி கூட்டணியில் வெளியான ஆக்சன், ‘மதகஜராஜா, ஆகிய படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். மேலும் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Your favourite. Our favourite. Everyone’s favourite. 🫶
The most loved combo is BACK again for another family entertainer 😎
First look promo drops on 21st Jan at 6 PM 🥳#SundarC @VishalKOfficial @hiphoptamizha @khushsundar #AnanditaSundar @benzzmedia pic.twitter.com/LIfEI805g3
— Avni Cinemax (@AvniCinemax_) January 19, 2026







