முக்கியச் செய்திகள் விளையாட்டு

இன்று தொடங்குகிறது 9வது சீசன் புரோ கபடி லீக்

புரோ கபடி லீக் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் ரீகேப் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

மண்ணோட வாசம், ஊர் மொத்தம் பேசும்னு சொல்லி கேள்வி பட்டிருக்கோம்! நம்ம மண்ணோட விளையாட்டு இன்னைக்கு உலகம் முழுவதும் பேசப்படுகிறது. பட்டி, தொட்டியெல்லாம் சடுகுடு, மூலை முடுக்கெல்லாம் பெருமூச்சு விடுற ஒரு தருணம் இருக்கான்னு கேட்டா, அது கபடி விளையாட்டுக்காக தான் இருக்கும்!

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்றிலிருந்து துவங்கும் புரோ கபடி லீக், ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமூச்சு விட வைக்குற ஒரே விளையாட்டு! இதில் 12 அணிகளோட பிரம்மாண்டமான தொடக்கமா இந்த முறை லட்சக்கணக்கான மக்களோட எதிர்பார்ப்பில, நம்ம தமிழ் தலைவாஸ் அணியும் களமிறங்குறாங்க. கூர்ந்த பார்வையோட, வேர்வ சொட்ட சொட்ட, புருவத்த ஒசத்தி, ஒரு பிடி மண்ணெடுத்து, சும்மா கில்லி மாதிரி ஒரு கால் முழியில அடிச்சு ரெய்டு போறத பாக்க கூட்டமே இருக்கும்!

உலகத்துக்கே முன்னோடியா இருக்குற நம்ம பாரம்பரியத்த, புகழோட உச்சத்துக்கு கொண்டு போகுற விதமா கடந்த 2014ல் இருந்து புரோ கபடி லீக் ஆரம்பமாச்சு. இதுவரை 8 சீசன் முடிஞ்சிருக்க நிலையில, கடைக்கோடி தமிழனுக்கும் பெருமை சேர்க்கிற விதமா, தங்கள அடையாளப்படுத்திட்டு இருக்காங்க, தி கிரேட் தமிழ் தலைவாஸ். நம்ம மண்ணு, நம்ம விளையாட்டுனு சொல்லுற தோரணையோட, 2017 புரோ கபடி லீக் தொடர்ல கால் தடம் பதிச்சு விளையாடிட்டு வந்துட்டு இருக்கிற அதே வேளையில, நம்ம மக்கள்கிட்ட இருக்க பெரிய எதிர்பார்ப்பு என்னனா!

” நம்ம ஆட்டத்த ஜெயிச்சு கப்பு வாங்குற நேரத்துக்காக காத்துகிட்டு இருக்காங்கன்னு தான் சொல்லணும்! காயப்பட்ட சிங்கத்தோடமூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்.”

புரோ கபடி லீக் அறிமுகமான முதலே அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, சிறப்பாக விளையாடி வந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்தது. நம் மண்ணோட விளையாட்டில் ஜெய்யுக்கும் தாகம், ஒவ்வொரு சீசனிலும் நமக்குள் தவித்துக் கொண்டு இருந்தாலும், அதற்கான பக்கபாலமான ஒரு சூழல் நம் அணிக்கு உருவாகாமலெயே இருந்தது.

ஆனால் இந்த முறை! கபடி உலகமே உற்று நோக்கும் அளவிற்கு நட்சத்திரங்கள் களமிறங்கி, நம் வெற்றி மற்ற அணிகளின் காதில் ஓங்கி ஒலிக்க செய்யும் விதமான ஒரு தொடராக இந்த தொடர் இருக்க போகிறது என தான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். குறிப்பா சொல்லக் கூடிய பவன் குமார் ஷேர்வாட் இந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். தெற்காசிய போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 2019ல் தங்கப்பதக்கம் வென்ற பெருமையும் அனுபவமும், இந்த முறை தமிழ் தலைவாஸ் அணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு புல்ஸ் அணிக்காக விளையாடிய போது, ஒரு சீசனில் மட்டும் 45 ரைட் பாயிண்ட்ஸ் உடன் அந்த சீசனை சம்பவம் செய்துள்ளார் பவன் பாய்னு செல்லப்படும் பவன் குமார். இத்தனை தொடர்களாக தரவரிசையில் கடைசி இடத்தில தொடர்ந்து வந்த தமிழ் தலைவாஸ் அணிக்கு, பவன் குமார் புத்துயிர் ஊட்ட வந்துள்ளார் என தான் சொல்ல வேண்டும். அதுமட்டும் இன்றி, அஜின்கியா பவர், ஹிமான்சு, மோஹித், சகர், சஹில், அபிஷேக் உள்ளிட்டோரை ரீடெயின் செய்தது, தனித்துவத்துடன் விளையாடும் அங்கித் சரோஹா போன்றோர் அணிக்கு இந்த முறை கூடுதல் தீயை மூட்ட செய்கிறார்கள்.

“போன வருஷம், முந்தன வருடம்னு பழைய கதைகள பேசாம, இந்த வருஷம் நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கணும்னு தில்லா விளையாட போறாங்க தமிழ் தளைவாஸ்”

எனும் மக்களின் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக, குழுவாக இணைந்து உச்சத்தை தொட ஒரு தருணமாக இதை பார்க்கும் அதே சமையம், இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் போட்டிகளை ரசிக்கவும், தார தப்பட்டையுடன் வெற்றியை கொண்டாடவும், ஒட்டுமொத்த தமிழகமும் காத்துகிட்டு இருக்காங்க.

இனி நம்ம காதுல ஒலிக்கிறது காயப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை இல்ல, வெற்றியின் கர்ஜனையா தான் இருக்கும்னு நம்பலாம்!

-நாகராஜன், நியூஸ் 7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: சென்னை கொண்டுவரப்பட்ட பொன்விழா தீபம்

Gayathri Venkatesan

ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் – படக்குழு வெளியிட்ட வீடியோ

Dinesh A

நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

EZHILARASAN D