நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவின் முதல் நிகழ்வாக
136-வது குதிரை பந்தயம் இன்று துவங்கியது.
நீலகிரி மாவட்டம், மலை பிரதேசமான இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே
மாதங்கள் கோடை காலமாகும். இந்த கோடை காலத்தை அனுபவிக்க
நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் , கேரளா கர்நாடகா உள்ளிட்ட
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா
பயணிகள் வருகை புரிகின்றனர்.
இவ்வாறு நீலகிரிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்காக, பல்வேறு
நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன. இந்நிலையில் , இந்த ஆண்டு கோடை காலத்தை
முன்னிட்டு முதலாவது நிகழ்ச்சியாக , 136-வது ஆண்டு குதிரை பந்தயம்
உதகையில் இன்று தொடங்கியது. மேலும், எதிர்வரும் மே 28-ந்தேதி வரை
நடைபெறுகிறது. மொத்தம் 17 பந்தயங்கள் நடத்த திட்டமிடபட்டுள்ளது.
இதற்காக சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளைச் சேர்ந்த 550 பந்தய குதிரைகள் வந்துள்ளன. இதற்காக, 24
பயிற்சியாளர்கள் மற்றும் 37 ஜாக்கிகள் வந்துள்ளனர். இதில், நீலகிரி டர்பி
கோப்பைகான பந்தையம் ஏப்ரல் 15-ந்தேதியும், நீலகிரி தங்க கோப்பைகான
பந்தயம் மே 21-ந்தேதி நடைபெறும் என ரேஸ் கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், குதிரைப் பந்தயத்தை காண தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய
மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதல்
நாளில் குதிரை பந்தயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன்
காண புது அனுபவமாக இருந்ததாக தெரிவித்தனர்.
—-கு.பாலமுருகன்







