அனிருத்துக்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்… ஏன் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல்ஐசி படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது.  ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.  இந்நிலையில்,…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் எல்ஐசி படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது.  ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.  இந்நிலையில், ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கி வருகிறார்.  காதல் கதையாக உருவாகும் இப்படத்தை  தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப் படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.  முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.  இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது,  படப்பிடிப்பு கோவை,  உடுமலைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

https://twitter.com/VigneshShivN/status/1758001632770752977

இந்நிலையில்,  அனிருத் இசையில் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.  இதற்கு  ‘என் ராஜாவுடன் நான் பணியாற்றும் பாடல்’ எனவும் எனது அரசனுக்கு நன்றி எனவும் விக்னேஷ் சிவன் அனிருத்தை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.