வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வேட்பாளர்களுக்கான விண்ணப்ப தேதியை திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 19 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000 எனவும், விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.2,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







