மாமன்னன் திரைப்படத்தை மெகா ப்ளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு அன்பும், நன்றியும் என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மாமன்னன் படத்தை வெளியிடுவதற்கு முன் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்தன. மேலும் தேனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் படம் வெளியான பிறகும் படத்தை வெளியிட கூடாது என்றும் அப்படி வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என போராட்டங்கள் நடந்தன. ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்தியா முழுவதும் மாமன்னன் ரூ.40 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை வெற்றி படமாக்கிய மக்களுக்கு நன்றி என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Udhaystalin/status/1677223949468332033?t=8ViGwvmJNMcHKL_6v24uCw&s=19
அந்த பதிவில் அவர் கூறியதாவது, “மாமன்னன் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250-க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாமன்னன் படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு எங்கள் அன்பும், நன்றியும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.







