மாமன்னன் திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெயிலர்: ராஜமெளலி, மகேஷ்பாபு வெளியிடுகின்றனர்!

‘மாமன்னன்’ திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெயிலரை இன்று மாலை 6 மணிக்கு இயக்குநர் எஸ்.எஸ் ராஜமெளலி மற்றும் நடிகர் மகேஷ்பாபு வெளியிடவுள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து…

மாமன்னன்’ திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெயிலரை இன்று மாலை 6 மணிக்கு இயக்குநர் எஸ்.எஸ் ராஜமெளலி மற்றும் நடிகர் மகேஷ்பாபு வெளியிடவுள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் மாமன்னன். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் குறித்தான பல விவாதங்களும் எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்  ‘மாமன்னன்’ திரைப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார். மேலும், படத்தின் வெற்றிக்காக நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மினி கூப்பர் காரை பரிசளித்தார்.

தமிழில் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்தத் திரைப்படம் தெலுங்கிலும் இந்த மாதம் 14-ம் தேதி வெளியாக இருப்பதைப் படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கில் ‘நாயகுடு’ என தலைப்பிடப்பட்டிருப்பதாகவும், மாமன்னன் திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெயிலரை இயக்குநர் எஸ்.எஸ் ராஜமெளலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு இன்று மாலை 6 மணிக்கு ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
தமிழைப் போலவே தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெறும் எனவும் படக்குழு நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். தமிழில் படம் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இதுவரை பாக்ஸ் ஆபிசில் 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.