தஞ்சாவூர் திருப்பனந்தாளில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி அம்பிகை சமேத காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர், திருப்பனந்தாளில் திருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திரிபுரசுந்தரி அம்பிகை சமேத ஊருடையார், வீரியம்மன், விசாலாட்சி அம்பிகை சமேத காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக கடந்த சில நாட்களாக நடந்தேறியது. ஜூன் 3ம் தேதி அருணஜடேஸ்வரர் யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகள் தொடங்கியது. ஆறுகால பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹீதியிடன் நிறைவடைந்தது.அதனை தொடர்ந்து புனித நீர் கலசங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க தெளிக்கப்பட்டது.
இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், காசித்திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரங்களை ஏராளமான பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.
வேந்தன்








