“ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கிடைக்காத வரவேற்பு தங்கலானுக்கு கிடைத்துள்ளது” – ஜி.வி.பிரகாஷ் பேட்டி!

ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைக்காத வரவேற்பு தங்கலானுக்கு கிடைத்துள்ளது என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்…

ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைக்காத வரவேற்பு தங்கலானுக்கு கிடைத்துள்ளது என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக
பங்கேற்ற நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒலியியல் இயந்திர கருவிகளை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் ஜி.வி. பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.

இதையும் படியுங்கள் : மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்! – தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்!

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

‘தங்கலான்’ திரைப்பட BGM மிகவும் நன்றாக வந்துள்ளது. அனைத்து திரைப்படங்களுக்கும் சிறப்பாகதான் இசை அமைக்க நினைக்கிறோம். ரசிகர்களின் வரவேற்பு சில திரைப்படங்களுக்கு சரியாக அமைவதில்லை. ‘ஆயிரத்தில் ஒருவனுக்கு’ திரைப்படத்திற்கு முதலில் கிடைக்காத வரவேற்பு, தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.  தொடர்ந்து 5 ஆவது நாளாக டிரெண்டிங்கில் உள்ளது. ‘தங்கலான்’  திரைப்படத்தில் என்னுடைய உழைப்பு எல்லோருக்கும் தெரிகிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் ‘இந்தியன் 2’ திரைப்படம் விமர்சனம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு ஜி.வி. பிரகாஷ் பதிலளிக்காமல் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.