நடிகர் விஜய்க்கு வில்லியாகும் சமந்தா

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 4ஆம்…

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 4ஆம் கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்களுக்கு வெளியாக உள்ளது. வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி67 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

 

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது விஜய்யின் 67வது படமான தளபதி67 இல் இணைய உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கைதி பட பணியில் உருவாகி வருவதாகவும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகி உள்ளனர். கத்தி, மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் சமந்தா இணைய உள்ளார்.

அதிலும் தளபதி67 படத்தில் படையப்பா நீலாம்பரி கதாப்பத்திரம் போலவே ஒரு ஸ்டிராங்கான கதாப்பத்திரத்தில் சமந்தா நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. வாரிசு திரைப்படத்தின் படபிடிப்புகள் நிறைவு பெற்ற பிறகு விஜய் இந்த படத்தில் இணைய உள்ளார்.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.