முக்கியச் செய்திகள் சினிமா

தளபதி 67: புதிய அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

தளபதி67 நல்ல கேங்ஸ்டர் படமாகவும் ஆக்சன் படமாகவும் இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி விஜயா மாலில் நடைபெற்றது. இதில் விஷால், இயக்குனர் வினோத்குமார், ரமணா, நந்தா மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். வாரிசு திரைப்படம் வெளியான பிறகு கண்டிப்பாக போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அப்டேட் கிடைக்கும். டைவர்ஷன் வேண்டாம் என்பதால் அதை பற்றி எதுவும் சொல்ல முடியாது.

தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் இறுதியாக விட்டது. வாரிசு ரிலீஸூக்கு பிறகு தான் எல்லாம் வெளியாகும். இந்த படம் நல்ல கேங்ஸ்டர் படமாகவும் ஆக்சன் படமாகவும் இருக்கும். தளபதி 67 படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். தற்போது தளபதி 67 தொடர்பாக எதையும் சொல்ல முடியாது.

தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது குறித்து பேசி தான் வருகிறோம். இன்னும் முடிவு ஆகவில்லை. என்னுடைய உதவி இயக்குனர்கள் பலர் படம் பண்ண வேண்டியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் குறித்து கண்டிப்பாக உங்களிடம் முதலில் சொல்லுவேன். நல்ல கதை ரஜினியின் கால்ஷீட் கிடைத்தால் படம் எடுப்பேன். ரஜினியிடம் நிறைய பேசி உள்ளேன். ஆனால் எப்போது நடக்கும் என தெரியாது.

ஜனவரி மாதம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. வாரிசு திரைப்படம் வெளியான பிறகு தான் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. அஜித்தின் சில்லா சில்லா பாடல் சிறப்பாக உள்ளது. மிகவும் பிடித்து இருந்தது. தீ தளபதி பாடல் பெரிய திரையில் பார்த்தேன் சிறப்பாக இருந்தது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளாவிற்கு ஏற்றுமதி செய்த யூரியா கலந்த பால் பறிமுதல்

EZHILARASAN D

நீட் விலக்கு மசோதா குறித்து ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பப்படும் – அமைச்சர் மா. சுப்பிரமணியம்

Web Editor

பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley Karthik