முக்கியச் செய்திகள் சினிமா

தளபதியை சந்தித்த தல

தனது ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் விஜய்யை, கூல் கேப்டன் மற்றும் தல என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சந்தித்த சுவாரஸ்ய நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது.

நடிகர் விஜய், நெல்சன் இயக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படபிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸ் படபிடிப்பு தளத்தில் நடைப்பெற்றுவருகிறது. மேலும் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக பயிற்சி பெற தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே. வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பீஸ்ட் படபிடிப்புதளத்தில் விஜய் & தோனி

இந்நிலையில் சமீபத்தில் விளம்பரப்படம் ஒன்றில் நடிப்பதற்காக தோனியும் விஜய் இருக்கும் அதே கோகுலம் ஸ்டுடியோவிற்கு வந்துள்ளார். அங்கு நடிகர் விஜய் மற்றும் தோனி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டனர். தொடர்ந்து விஜய்யின் கேரவனில் இருவரும் சிறிது நேரம் கலந்துடையாடியுள்ளனர். இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தலதளபதி என்ற ஹேஸ்டேக்கில் வைரலாகிவருகிறது.

முன்னதாக தோனியும், விஜய்யும் ஏற்கெனவே ஒருவருக்கொருவர் நன்கு அற்முகமானவர்கள். கடந்த 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகர் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய்யின் மகனும் தோனியின் தீவிர ரசிகராவார். நடிகர் விஜய் மற்றும் தோனியின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தளபதியை சந்தித்த தல எனக்கூறி ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

இவர்களின் சந்திப்பிற்கு பிறகு தோனியின் கார் வரை வந்து விஜய் வழியனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

41-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

Halley Karthik

’தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி’

Arivazhagan Chinnasamy

‘கபி கபி’ கதையாசிரியர் சாகர் சரஹாடி காலமானார்!

EZHILARASAN D