பரமத்தி வேலூர் அருகே கோர விபத்து – கார் ஓட்டிய 2 சிறுவர்களும் உயிரிழப்பு!

பரமத்தி வேலூர் அருகே இரு சிறுவர்கள் ஓட்டி வந்த காரும் எதிரே வந்த மற்றோரு காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூர் வட்டம்,  கபிலர்மலை…

பரமத்தி வேலூர் அருகே இரு சிறுவர்கள் ஓட்டி வந்த காரும் எதிரே வந்த மற்றோரு காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூர் வட்டம்,  கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (45).  இவரது மகன் லோகேஷ் (17),  அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் நெருங்கிய உறவினர் ரமேஷின் (42) மகன் சுதர்சன் (14).  இவர்கள்  குடும்பத்துடன் கபிலர்மலை பரமத்தி செல்லும் சாலையில் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் மற்றும் சுதர்சன் இருவரும் ஆம்னி காரை எடுத்துக்கொண்டு நேற்று இரவு பரமத்தி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் கபிலர்மலை செல்ல ஜேடர்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர் . அப்போது எதிரே வந்த காரும் சிறுவர்கள் வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் லோகேஷ் மற்றும் சுதர்சன் இருவரும் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள் : குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிப்பு! – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!

இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  பொதுமக்கள் அளத்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த ஜேடர்பாளையம் காவல்துறையினர் சிறுவர்களின் உடலை வேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.  விபத்தில் சிறுவர்கள் ஓட்டி வந்த ஆம்னி கார் முற்றிலும் நொறுங்கி இருவேறு பகுதியாக கிடந்தது.

மேலும் மற்றொரு காரில் வந்த கபிலர்மலை அருகே உள்ள கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.