நடிகை பிரியங்கா சோப்ரா மிகச் சரியான முதலாளி மற்றும் சிறந்த தாய் என அவரது கணவர் நிக் ஜோனஸ் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பிரபலமானவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர்.
குழந்தை பிறந்து ஆரம்பத்தில் முகத்தை காட்டாமல் மறைத்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக தனது குழந்தையை வெளி உலகத்துக்கு பிரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தினார்.
நிக் ஜோனஸ் சகோதரர்களின் நிகழ்ச்சியில் தனது குழந்தையோடு பிரியங்கா சோப்ரா வந்திருந்தார். பிரியங்கா சோப்ராவின் மடியில் அவரது குழந்தை மால்டி உட்கார்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் தந்தையர் தினம் தொடர்பாக பேசிய போது “ எனது தந்தை எங்களை வளர்ப்பதில் தனது கடமையை சிறப்பாக செய்துள்ளார். எங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு என் தந்தையிடமிருந்து சில விசயங்களை எடுத்துக் கொள்வேன்.
சிறந்த பெண்கள் இல்லாமல் ஒரு குழந்தைக்கு நாங்கள் நல்ல தந்தையாக இருக்க முடியாது. அந்த வகையில் வாழ்க்கைப் பயணத்தை எனது மனையிவுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். பிரியங்கா சோப்ரா மிகச் சரியான முதலாளி மற்றும் சிறந்த தாய்” என தெரிவித்துள்ளார்.







