பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ‘டீன்ஸ்’ (Teenz) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. காவெமிக்அரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
ஒரு பள்ளியில் படிக்கும் நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் ஒரு குழுவாக காட்டுக்குள் செல்கின்றனர். அந்த காட்டில் நடக்கும் சில மர்மமான விஷயங்கள், பேய்கள் நடமாட்டம் ஆகியவற்றை பார்த்து பயந்த அவர்கள் எப்படி அங்கிருந்து வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். காட்டில் சிக்கிய மாணவர்களின் நிலை என்ன என்பதை திரில் மற்றும் சஸ்பென்ஸ் உடன் பார்த்திபன் வழங்கியுள்ள படம் தான் ‘டீன்ஸ்’.
https://twitter.com/rparthiepan/status/1788074930812375069
சமீபத்தில் ‘டீன்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ‘வீ ஆர் தி டீன்ஸ்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல அவர் வேற்ப்பை பெற்றது. இந்நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.







