கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான டோரதி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறிது நேரம் மட்டுமே திரையில் வந்தாலும் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிர்தரப்பு வழக்கறிஞராக மிஹ்கின் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மேலும், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம். சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




