நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’ஸ்லம் டாக்’. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜகன் நாத் இயக்கியுள்ள இப்படத்தில் சம்யுக்தா மேனன், தபு, துனியா விஜய், விடிவி கணேஷ், பிரம்மாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். ‘பூரி கனெக்ட்ஸ்’ மற்றும் ‘ஜேபி மோஷன் பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.
பூரி ஜகன்நாத்- விஜய் சேதுபதி முதன் முறை கூட்டணி அமைத்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.




