மணப்பாறை அருகே அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க கோரி ஆசிரியர் ஒருவர் தானே எழுதிய பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் காந்தி.
இவர்,அரசு பள்ளி என்பது நமது பெருமையின் அடையாளம், அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தானே பாடல் எழுதி, இசையமைத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். அரசு பள்ளியில் உள்ள வசதிகளையும் அவர் பாடலில் விவரித்துள்ளார்.
அதில், அரசு பள்ளியில் படிக்கிற போது பணம்
செலவு இல்லாமல் கல்வி கற்கலாம். அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு
நிறைய திட்டங்கள் உள்ளன. வண்ண சீருடை, படிக்க புத்தகம், எழுத நோட்டு,
வரைபடங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர் பென்சில், காலை உணவு திட்டம், மதிய
சத்துணவு, அனைத்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது.
காலணி,புத்தகப்பை, உயர் கல்வி படிக்க வழிகாட்ட நான் முதல்வன் திட்டம்,
வானவில் மன்றம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம்
இப்படி பல்வேறு திட்டங்களில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற
ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருகிறார்கள் .
அரசு பள்ளியில் நூலக வசதி, கணினி வசதி, இலக்கிய மன்ற விழா, ஆண்டு விழா நடைபெறுகின்றன. மற்றும் காரத்தே போன்ற தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. உயர் படிப்பில் இடஒதுக்கீடு கிடைக்கிறது, இப்படி பல்வேறு சலுகைகள் அரசு பள்ளியில் உள்ளது.
இதை மக்கள் மனதிலும் மாணவர்களின் மனதிலும் தொடர்ந்து விதைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர் காந்தி எழுதிய பாடல் அவரே இசையமைத்து தாளம் போட்டு பாடுகிறார். அரசு பள்ளியில் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவோம். அரசு பள்ளியில் ஆடலாய் பாடலாய் விளையாட்டாய் விடுகதையாய் அற்புதமாக பாடங்கள் நடத்தும் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







