முக்கியச் செய்திகள் குற்றம்

மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோவில் கைது

மதுரையில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி, வீடியோ பதிவு
செய்து மிரட்டியதாக பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாநகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவருடன் நட்பாக பழகி வந்தார். நாளடவையில் இவர்களது பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் ஆபாச வீடியோக்களில் வருவதுபோன்று மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட வேண்டும் என்ற குரூர எண்ணம் தோன்றியுள்ளது.

இதையடுத்து, அந்த ஆசிரியை தன்னிடம் டியூசன் பயில வந்த இரு மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுட்டதாக கூறப்படுகிறது. அதனை வீடியோவாக ஆசிரியையும், வீரமணியும் பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக வீரமணி மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவர்கள் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனையடுத்து, வீரமணி மற்றும் ஆசிரியை மீது மதுரை மாநகர தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பள்ளி ஆசிரியை வீரமணியுடன் சேர்ந்து தனது மகனையும் மிரட்டி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement:
SHARE

Related posts

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படப்பிடிப்பு துவங்கியது

Arivazhagan CM

விசாரணை கைதி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Halley Karthik

தென் சென்னையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை: முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக அரசு!

Halley Karthik