இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.
இதுபற்றி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் காலம், டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இந்தியா செல்ல புதிய பாஸ்போர்ட்டுடன் காலாவதியான பழைய பாஸ்போர்ட்டையும் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், பயணிகள் அவர்களின் புதிய பாஸ்போர்ட்டுடன் சேர்த்து பழைய பாஸ்போர்ட்டின் எண்களின் அடிப்படையிலேயே பயணிக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன் இருந்த நடைமுறையில் பயணிகளுக்கு பெரும் சிக்கலாக இருந்து வந்த இத்தகைய நடைமுறையை மாற்றியமைத்துள்ளது வெளி நாட்டு வாழ் இந்திய மக்கள் மத்தியில் வரவேற்பை அளித்துள்ளது.