#Tasmac ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளை! எங்கே தெரியுமா?

மேலூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலம் அருகே, பெருமாள்பட்டியில் 5445 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு…

மேலூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலம் அருகே, பெருமாள்பட்டியில் 5445 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மதுபான கடையின் ஊழியர்களான ராஜ்குமார், பாண்டியராஜன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் நேற்று இரவு விற்பனையை முடித்து விட்டு, மேலூருக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர்.

ஆட்டோ வெள்ளலூர் முனியாண்டி கோயில் அருகே சென்றுகொண்டிருந்த போது, பின்னால் காரில் தொடர்ந்து வந்த கும்பல், ஆட்டோவை கத்தியைக் காட்டி மிரட்டி வழி மறித்துள்ளனர். பின்னர், மர்ம நபர்கள் ஆட்டோ ஓட்டுநரான மேலூரைச் சேர்ந்த திருமலையை தலையில் வெட்டியும், மதுபான ஊழியர்களை தாக்கியும், அவர்கள் விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 1 லட்சத்து 85 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த ஓட்டுநர் திருமலை மதுரை அரசு மருத்துவமனையிலும், அரசு மதுபான கடை ஊழியர்கள் மேலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.